கணவனாக நினைத்து கன்று குட்டியுடன் வாழும் பெண்

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (18:16 IST)
கம்போடியாவைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் கன்று குட்டி ஒன்றை இறந்துபோன தனது கணவராக நினைத்து அதை வளர்த்து வருகிறார்.


 

 
கம்போடியாவை சேர்ந்த வயதான பெண் ஒருவர் கன்று குட்டி ஒன்றை இறந்துபோன தனது கணவராக நினைத்து அதை வளர்த்து வருகிறார். இது அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கேட்பவர்களிடம் அந்த பெண், தன் கணவர் கனவில் தோன்றி அவர் அந்த கன்று குட்டியில் உடலில் இருப்பதாக கூறியதாக தெரிவித்து வருகிறார். 
 
குழந்தைகளும், அக்கம் பக்கத்தினர் சிலரும் இதை நம்பத் தொடங்கிவிட்டனர். இதனால் தொழுவத்தில் இருக்க வேண்டிய கன்று தற்போது சகல வசதிகளுடன் மெத்தை, தலையணையுடன் வாழ்ந்து வருகிறது. மேலும் அந்த கன்று குட்டியின் பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சியும் ஓடிக்கொண்டிருக்கிறது.
அடுத்த கட்டுரையில்