காதலனை சுட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடிய மாடல்! – பிரேசிலில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (15:27 IST)
பிரேசிலில் காதலனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு நிர்வாணமாக மாடல் அழகி ஒருவர் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ். இவர் 40 வயதான ஜோர்டான் லொம்பார்டியை காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் அடுத்த் ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ப்ரேசிலியாவில் உள்ள பார்க்வே ஓட்டலில் இருவரும் தங்கியிருந்துள்ளனர். அப்போது மார்செல்லா அதிகமாக மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மார்செல்லாவுக்கும், ஜோர்டானுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மார்செல்லா கைத்துப்பாக்கியை வைத்து ஜோர்டானை சுட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து நிர்வாணமாக ஓட்டலை விட்டு வெளியேறி காரை எடுத்துள்ளார். தடுக்க வந்த ஊழியரை காரில் இடித்துள்ளார். பின்னர் சாலையில் பள்ளி பேருந்து ஒன்றின் ஓட்டுனரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.

துப்பாக்கியால் சுடப்பட்ட ஜோர்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாடல் அழகியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்