மேரேஜ் ஆகியும் சிங்கிள்: வீக் எண்டில் மட்டுமே கணவன்: வினோத பெண்கள்

வியாழன், 25 ஏப்ரல் 2019 (12:40 IST)
பிரேசில் உள்ள நெய்வ டி கோர்டெய்ரோ என்னும் பகுதியில் 600 பெண்கள் மட்டுமே வாழ்ந்துவருகின்றனர். அதுவும் முக்கியமாக 20 மற்றும் 35 வயதிற்கு உட்பட்டவர்களே அதிகமாக இருக்கின்றனர். 
 
அதாவது, அந்த பகுதியில் இருக்கும் பெண்கள் சிலருக்கு திருமணம் ஆகியுள்ளது. இருப்பினும் கணவன்மார்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்கள் வார இறுதிகளில் மட்டுமே திரும்ப முடியும்.
 
அதேபோல் ஆண் பிள்ளைகள் 18 வயதில் வெளியே அனுப்பி வைக்கப்படுகின்றனர், மேலும் தொலைதூர பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் நகரில் முழுநேரமாக வாழ அனுமதிக்கப்படுவதில்லை.
 
1890-களில் இந்த குடியேற்றம் துவங்கியது என கூறப்படுகிறது. ஒரு இளம் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் கத்தோலிக்க சர்ச்சிலிருந்து விலகியபோது, அவர் விபச்சாரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர், அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
 
பின்னர், பெண்கள் மட்டும் குடும்ப சமூகத்தில் சேர்ந்தனர் மற்றும் அவர்கள் பெண் சூழலில் வாழவே ஆசைப்பட்டனர். ஆனால், காலம் மாறி வருவதால், இப்போது இந்த விதிகள் முன்பை விட இப்போது தலர்த்தப்பட்டு வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்