பிரேசிலை புரட்டி எடுக்கும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவால் 24 பேர் பலி!

செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (16:01 IST)
பிரேசிலில் கடந்த சில நாட்களாக கடும் கனமழை பெய்து வரும் நிலையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த சில நாட்களாக கடும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவும் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக பிரேசிலின் சயோ பாலோ மாகாணம் மழை வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனர். இதுவரை வெள்ளம், நிலச்சரிவால் 24 பேர் பலியாகியுள்ள நிலையில் மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்