தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி! – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

செவ்வாய், 4 ஜனவரி 2022 (08:41 IST)
தமிழகத்தில் சமீபத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டில் நவம்பர் மாதத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகமான மழை பெய்தது. சென்னையில் அதிகனமழையால் வீடுகள் மூழ்கிய நிலையில், டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதமடைந்தன. சென்னை தொடங்கி குமரி வரை பல பகுதிகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் ஒருமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000 மற்றும் இருமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்