தற்கொலைப்படை தாக்குதல்; 26 பேர் பலி: பாகிஸ்தான் தேர்தலில் பரபரப்பு!

புதன், 25 ஜூலை 2018 (14:42 IST)
பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த பிறகு ஜனநாயக முறைப்படி இரண்டாவது முறையாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெருகிறது. 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடக்கிறது. 
இதனோடு பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபை தேர்தலும் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மொத்தம் 10 கோடியே 59 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். ஓட்டு பதிவிற்காக நாடு முழுவதும் 89 ஆயிரம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட நவாஸ் ஷெரிப் பிரதமரானார். அவர் ஊழல் வழக்கில் கைதாகி தற்பொழுது சிறையில் உள்ளார்.
 
தேர்தல் காரணத்தினால், வாக்குசாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும், பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவேட்டாவில் தற்கொலைப்படை தாக்குதல் நகழ்த்தப்பட்டது. 
 
இதில், 3 போலீசார், 2 குழந்தைகள் உள்பட 26 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 35க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். தேர்தல் சமயத்தில் இது போன்ற நிகழ்வுகளால் பாகிஸ்தானில் பரபரப்பான சூழ்நிலை நிலவி உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்