பாகிஸ்தானில் வருகிற எட்டாம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானின் கராச்சி மாநகரில் உள்ள தேர்தல் ஆணையத்தின் கார் பார்க்கிங் பகுதியில் இன்று குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வெடிகுண்டு மறைக்கப்பட்டிருந்த பை ஒன்றை மர்ம நபர்கள் மறைத்து வைத்துவிட்டு சென்றிருந்த நிலையில், துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் ஒருவர், அந்த பையன் எடுத்து குப்பையில் வீசி உள்ளார். அப்போது அந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.