பலூசிஸ்தானில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு - 26 பேர் பலி

Sinoj

புதன், 7 பிப்ரவரி 2024 (20:03 IST)
பலூசிஸ்தானில் இன்று அடுத்தடுத்து 2 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில், 26 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

பாகிஸ்தான் நாட்டில் நாளை ( 8 ஆம் தேதி) பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று பலூசிஸ்தான் மாகாணத்தில் அடுத்தடுத்து 2 இடங்களில் குண்டுவெடிப்பு நடந்தன. இதில் 26 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:  சுயேட்சை வேட்பாளரான காக்கர்  என்.ஏ.265 தொகுதியிலும், பாலூசிஸ்தான் பிபி-47 மற்றும் பிபி 48 ஆகிய சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகிறார். பிஷின் பகுதியில் அஸ்பந்தியார் காக்கர் தேர்தல் அலுவலகம் வெளியே முதல் குண்டு வெடித்தது.முதல் குண்டு வெடித்ததைத்தொடர்ந்து கீலா சைபுல்லா பகுதியில் மற்றொரு குண்டு வெடித்தது.

மேலும், தேர்தல் அலுவலகத்திற்கு வெளிய  நடந்த குண்டுவெடிப்பில், 12 பேர் கொல்லப்பட்டதாக துணை ஆணையாளர் யாசி பஜாய் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் நாளை பொதுத்தேர்தல் நடக்கவுள்ள  நிலையில், இன்று குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை அளிக்கும்படி பலூசிஸ்தான் தலைமை செயலாளர் மற்றும் ஐஜியிடம்  பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்