இந்த ஆண்டின் மிகப்பெரிய விண்கல்! – இன்று பூமியை கடக்கிறது!

திங்கள், 22 மார்ச் 2021 (12:16 IST)
இந்த ஆண்டில் பூமியை கடக்கும் மிகப்பெரிய விண்கல் இன்று இரவு பூமியை கடக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வானில் நடக்கும் மாற்றங்களை அவ்வபோது ஆராய்ந்து வரும் வானியல் நிபுணர்கள் 2001 FO32 என்ற மிகப்பெரிய விண்கல் பூமிக்கு அருகே வருவதை கண்டறிந்திருந்தனர். இந்தியாவில் உள்ள படேல் சிலையை போல இருமடங்கு தொலைவு அகலம் கொண்ட இந்த விண்கல்லானது வேகமாக பூமியின் அருகே கடந்து செல்ல உள்ளது.

பூமியிலிருந்து 2 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் கடந்து செல்லும் இந்த விண்கல்லானது மணிக்கு 1,23,876 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது சாதாரணமான விண்கற்கள் பயணிக்கும் வேகத்தை விட மிக அதிகமாகும். 2 மில்லியன் தொலைவிற்கு அப்பால் பயணிக்கும் இந்த விண்கல்லை வெறும் கண்களால் காண முடியாது என்றும், விண்வெளி மையங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொலைநோக்கிகளால் மட்டுமே காண முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்