டிரெண்ட் மாறியாச்சு... கோவில் வாசல் போயாச்சு...: விமானத்தில் பிச்சையெடுத்த பிச்சைகாரர்!

சனி, 14 ஜூலை 2018 (13:20 IST)
கத்தார் விமான நடுவானின் பயணித்துக்கொண்டிருந்த போது, விமானத்தில் பயணி ஒருவர் தீடிரென சக பயணிகளிடம் பிச்சை எடுக்க துவங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
குறிப்பிட்ட விமானம் கத்தாரில் இருந்து ஈரான் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் விமானம் நடுவானத்தில் செல்லும் போது, தன்னுடைய இருக்கையில் அமராமல் எழுந்து நின்று பிச்சை எடுக்கதுவங்கியுள்ளார். 
 
முதலில் அவரை தீவிரவாதி, என நினைத்து பயணிகள் அச்சமடைந்துள்ளனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரித்ததில் அவர் ஒரு பிச்சைக்காரர் என்பது தெரிய வந்துள்ளது.
 
விமானத்தில் பயணிக்கும் முன் முறையான பரிசோதனைகள் செய்யப்பட்ட போது அவர் பிச்சைகாரர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லையாம். மேலும் அவர் பிச்சை எடுத்த காட்சியினை வீடியோ பதிவேற்றம் செய்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்