இந்து பண்டிகைகளில் ஒன்றான துர்கா பூஜா இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒன்று. ஆனால் ஓடிசா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய பகுதிகளில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். வங்க தேசத்திலும் இந்துக்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் அங்கும் துர்கா பூஜா சிறப்பாக கொண்டாடப்படும்.
மியான்மரில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் சுமார் 4,20,000 பேர் வங்க தேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். துர்கா பூஜை கொண்டாட சில கமிட்டிகள் உண்டு. அந்த கமிட்டிகள் அங்குள்ள இந்துகளிடம் பணம் வசூலித்து துர்கா பூஜையை சிறப்பாக நடத்துவது வழக்கம்.
தற்போது அந்த கமிட்டிகளின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், வங்க தேசத்தில் வாழும் இந்துக்கள் மியான்மரில் நடக்கும் கலவரங்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர். வங்க தேசத்துக்கு லட்சக்கணக்கில் அகதிகள் வந்து குவிகின்றனர். அவர்களுக்கு உதவ இந்து சமுதாயம் விரும்புகிறது.