ஆஃப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கத் தடை - தாலிபான்கள் உத்தரவு

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (22:21 IST)
ஆப்கானிஸ்தான்  நாட்டில் பெண்கள் படிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஃப்கானிஸ்தானில் கடந்த 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க படைகள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட்டதால், ஆப்கானிஸ்தான் ஆட்சியை தாலிபான்கள் கைப்பற்றினர்.

இந்த நிலையில், பழமைவாதிகளாக தாலிபான்கள் பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தாலிபான்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளனர்.

இதனால், பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே, பொதுதுபோக்கு பூங்கா, ஆண்கள் துணையின்றி விமானங்களில் செல்ல பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்