நேரடி ஒளிபரப்பில் இவர் என்ன செய்கிறார் பாருங்கள்... - வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (14:04 IST)
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தொலைக்காட்சி சேனலில் நேரடி ஒளிபரப்பில் ஒரு பெண் செய்தியாளர் செய்த செயல் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.


 

 
ஆஸ்திரேலியா நாட்டில் இயங்கி வரும் ஏபிசி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருபவர் நடாஸா எக்சில்பி. சமீபத்தில் ஒரு செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென தன்னை மறந்து தன்னுடைய கையில் உள்ள பேனாவை உற்றுப்பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.
 
சட்டென்று நேரலை போய்க் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த அவர், அதிர்ச்சியாகி பின் சுதாரித்து அந்த செய்தியை வாசித்து முடித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலராலும் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.
 
அடுத்த கட்டுரையில்