காரில் உள்ள திரை மூலம் ஆன்லைன் மீட்டிங்: மைக்ரோசாப்ட் புதிய வசதி!

Mahendran

வியாழன், 11 ஜனவரி 2024 (16:18 IST)
ஆன்லைன் மீட்டிங் இதுவரை கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன் மூலமே நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது காரில் உள்ள திரை மூலம் கூட ஆன்லைன் மீட்டிங்கில் கலந்து கொள்ளலாம் என புதிய வசதியை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுடன் ஆன்லைன் மீட்டிங் ஏற்பாடு செய்யும் என்பதும் இவை பெரும்பாலும் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் மொபைல் போன் மூலமே நடத்தப்படும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் காரில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் திரையில் கனெக்ட் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆன்லைன் மீட்டிங்களுக்காக பயன்படுத்தப்படும் டீம்ஸ் செயலியை ஆண்ட்ராய்டு ஆட்டோ மூலம் கார்களில்  இணைத்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் மொபைல் போன் பயன்படுத்தாமல் காரில் பயணம் செய்தபடியே வீடியோ கால் மீட்டிங்கில் இணைந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி பலருக்கு பெரும் நன்மையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்