அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவிற்கும் அதனுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும் வரிவிதிப்பை அதிகப்படுத்தி வரும் நிலையில், அமெரிக்காவிற்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்திய நிலையில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாததால் இந்தியாவிற்கு 25 சதவீதம் வரியை விதித்தார், சீனாவுக்கு ரஷ்யாவுடனான வணிகத்திற்காக கூடுதல் வரி விதித்தார்.
மேலும் ரஷ்யா - உக்ரைன் போரில் ஆகஸ்டு 9 தேதிக்குள் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட வேண்டும். இல்லையெனில் ரஷ்யா மீது கடும் வர்த்தக கட்டுப்பாடுகளும், 100 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என எச்சரித்தார்.
ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்கு பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ள ரஷ்ய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா “அமெரிக்காவின் சட்டவிரோதமான, ஒரு தலைப்பட்சமான வரிவிதிப்பிற்கு ரஷ்யா பணியாது. எப்போதும் அமெரிக்காவை எதிர்த்து நிற்போம். அமெரிக்கா புதிய காலனித்துவம் மூலமாக உலகை கட்டுப்படுத்த முயல்கிறது. அதன் போக்கை ஏற்க முடியாது” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K