அயலான் படத்துக்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதியா?

vinoth

வியாழன், 11 ஜனவரி 2024 (07:17 IST)
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது.

பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி (நாளை) அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இணையத்தில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தமிழக அரசு எந்த படத்துக்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என்ற முடிவை எடுத்ததாக சொல்லப்பட்ட நிலையில் அயலான் படத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்