புர்கினா ஃபசோ கிராமத்தில் நடந்த தாக்குதலில் 132 பேர் பலி

ஞாயிறு, 6 ஜூன் 2021 (14:29 IST)
ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபசோவின் வட பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 132க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

 
சமீப காலத்தில் நடந்த மோசமான தாக்குதல் இது என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பல வீடுகள் மற்றும் உள்ளூர் சந்தை எரிக்கப்பட்டது.
 
இந்த வன்முறைக்கு எந்தக் குழுவும் பொறுப்பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் சமீப காலமாக, குறிப்பாக எல்லைப் பகுதிகளில் இஸ்லாமிய குழுக்களின் தாக்குதல் அதிகமாகி வருகிறது. இந்த சம்பவம் தன்னை சீற்றமடைய செய்துள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்