இந்திய அரசால் தேடப்பட்டு வரும் நபரான நித்யானந்தா, கைலாஷா என்ற தனிநாட்டை அமைத்துள்ளதாக கூறியதோடு அந்த நாட்டின் கரன்சியையும் சமீபத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் ஐநாவின் அனுமதி பெற்ற இந்த நாட்டில் விரைவில் மக்கள் குடியேறுவார்கள் என்றும் அந்த நாட்டிற்கு தானே அதிபர் என்றும் அவர் பிரகடனப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் இப்போது தனது நாட்டின் மீது தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், பயங்கரவாத விதைகளை அனுப்பி பயோவாரை தொடங்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர் சமீபத்தில் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.