பேஷன் உலகில், வடிவமைப்பாளர்கள் தங்கள் படைப்பாற்றலை மாறுபட்ட கோணத்தில் முன்வைக்கின்றனர். சமீபத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதியன்று நடைபெற்ற மிலான் வீக்கில் இதுவரை யாருமே பயன்படுத்தாத புதிய உத்தி ஒன்று களம் இறக்கப்பட்டது.
மாடலின் அழகோ, ஆடையோ, அலங்காரமோ, ஒப்பனையோ யாருடைய கண்ணிலும் படவில்லை. அனைவரையும் ஈர்த்தது மாடலின் மூன்றாவது மார்பகம்...
சாதாரணமான, இயல்பான ஒப்பனையில் நீல வண்ண ஆடை அணிந்திருந்த பெண் மேடையில் நடந்து வந்தபோது, அவரது இரு மார்பகங்களுக்கு நடுவில் மூன்றாவது மார்பகம் முளைத்ததுபோல அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.