கொரோனாவை வீழ்த்துமா அமெரிக்க தடுப்பு மருந்து ??

செவ்வாய், 10 நவம்பர் 2020 (10:04 IST)
அமெரிக்காவின் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டோரில் 90 % பேருக்கு பலன் கிடைத்துள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் 51,238,677 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. 
 
மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,269,113 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 36,051,332 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 13,918,232 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. 
 
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,421,956 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 244,448 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 6,552,610என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த செய்தி வருத்தத்தை அளிக்கும் பட்சத்தில் ஆறுதல் அளிக்கும் விதமாக அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் ஜெர்மெனியின் பயோ எண்டெக் மருந்து நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 90% பேருக்கு நல்ல பலன் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்