பாகுபலி படத்தில் வில்லன் வேடத்தில் நடித்ததன் மூலம் நடிகர் ராணா இந்தியா முழுவதும் பிரபலமானார். இவர் தெலுங்கில் பல ஆண்டுகளாக சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சுரேஷ் பாபுவின் மகன் ஆவார். மேலும் பல படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராகவும் செயல்பட்டுள்ளார். முன்னணி கதாநாயகிகளுடன் காதலில் விழுந்த அவர் பின்னர் அந்த காதல்களை முறித்துக் கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் தனது காதலி இவர் தான் என மஹீகா பஜாஜ் என்ற பெண்ணை அறிமுகம் செய்தார்.
இந்நிலையில் இப்போது கொரோனாவுக்கு பின்னர் நடிகர் நடிகைகள் எல்லாம் யுடியூப் சேனல் தொடங்குவதை போல ராணாவும் தனது சேனலை தொடங்கியுள்ளார். சவுத் பே லைவ்' (South Bay Live) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சேனலில் 10 வினாடியில் இருந்து 10 மணி நேரம் வரையிலான காணொலிகள் பதிவேற்றப்படும் என சொல்லப்படுகிறது. பிரபலங்கள், இசை, நாட்டு நடப்பு, அனிமேஷன் போன்ற பல துறைகளைச் சேர்ந்த வீடியோக்கள் பார்க்கக் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.