அமெரிக்கர்கள் என்ன அப்பாவிகளா? டிரம்ப் கேள்வி

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2017 (20:00 IST)
நம் நாட்டிலேயே நிறைய கொலையாளிகள் இருக்கின்றனர். அமெரிக்கா என்ன அப்பாவிகள் நிறைந்த நாடா? என கேள்வி கேட்டுள்ளார்.


 


தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் ரஷ்ய அதிபர் புதின் ஒரு கொலையாளி என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் கூறியதாவது:-

நம் நாட்டிலேயே நிறைய கொலையாளிகள் இருக்கின்றனர், அமெரிக்கா என்ன அப்பாவிகள் நிறைந்த நாடா? புதின் மீது தான் மரியாதை வைத்துள்ளேன். இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் ரஷ்யாவுக்கு ஒத்துழைக்க தயார், என்றார்.

டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினுக்கு ஆதரவாக பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவை புதினுடன் ஒப்பிட்டு பேசியதற்காக ட்ரம்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். செனட் உறுப்பினர் பென் கார்டின், ஜனநாயக கட்சியின் நேன்சி பெலோசி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்