சிஏஏ சட்டம் எங்களுக்கு கவலை அளிக்கிறது.. அமெரிக்க வெளியுறவுத்துறை..!

Siva
வெள்ளி, 15 மார்ச் 2024 (12:33 IST)
இந்தியாவில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படுவதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில் இந்த சட்டம் எங்களுக்கு கவலை அளிக்கிறது என அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக மார்ச் 11ஆம் தேதி மத்திய அரசு தெரிவித்த நிலையில் இந்த சட்டத்திற்கு திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன

இந்த நிலையில் இந்த சட்டம் குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் பேட்டி அளித்த போது இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள சிஏஏ சட்டம் எங்களுக்கு கவலை அளிக்கிறது, இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாக  கண்காணித்து வருகிறோம்

மத சுதந்திரத்திற்கான மரியாதை அளிக்கப்பட வேண்டும், அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் கோட்பாடு என்று அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்

இந்துக்கள், சீக்கியர்கள் உள்பட ஒரு சில  மதத்தை சேர்ந்தவர்கள் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று சிஏஏ சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்களுக்கு மட்டும் இடமில்லை என்பது வருத்தத்துக்குரியதாக உள்ளது என்றும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்