கைவிட்ட அமெரிக்கா.. உக்ரைனை ஏவுகணைகளால் துளைத்த ரஷ்யா! - குழந்தைகள் உட்பட 25 பேர் பரிதாப பலி!

Prasanth Karthick

ஞாயிறு, 9 மார்ச் 2025 (08:32 IST)

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரில் அமெரிக்கா உக்ரைனுக்கான உதவிகளை நிறுத்திய நிலையில் ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ளது.

 

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடங்கியது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள், பொருளாதார உதவிகளை வழங்கி வந்தன. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்த இரு நாடுகள் இடையேயான போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் நேட்டோவில் இணையும் எண்ணத்தை கைவிடுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் அவர் வலியுறுத்திய நிலையில், ஜெலன்ஸ்கி அதை மறுத்தார்.

 

இதனால் அமெரிக்கா, உக்ரைனுக்கு வழங்கி வந்த ஆயுத உதவிகள் மற்றும் உளவு அமைப்புகளின் உதவியை நிறுத்தியுள்ளது. இதனால் தற்போது ரஷ்யாவும் உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. சமீபமாக ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி உக்ரைன் மீது கடும் தாக்குதலை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. டோனெட்ஸ்க் பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பர 11 பேர் பலியாகியுள்ளனர்.

 

கார்கிவ் நகரில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் ரஷ்யாவின் தாக்குதலில் பலர் பலியாகியுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்