மைக்ரோசாஃப்டுக்கு டெண்டர் விட்ட ட்ரம்ப் – மாட்டிவிட்ட அமேசான்!

புதன், 12 பிப்ரவரி 2020 (10:07 IST)
அமெரிக்காவில் பெண்டகனை நவீனப்படுத்தும் ஒப்பந்தத்தில் அதிபர் ட்ரம்ப் முறைகேடு செய்துள்ளதாக அமேசான் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பெண்டகனை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்காக அமெரிக்கா 10 பில்லியன் டாலர்கள் ஒதுக்கியுள்ளது. இதற்கு அமேசான், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அமேசான் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் மீதான விசாரணை நடந்து வரும் நிலையில் அமேசான் சில புதிய மனுக்களையும் நீதிமன்றத்தில் அளித்துள்ளது.

அதில் ஒப்பந்தம் செய்வதில் ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் மைக்ரோசாஃப்டுக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளதாகவும், அமேசானை ஒழித்துக்கட்ட ட்ரம்ப் திட்டம் தீட்டியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியை எதிர்த்து கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்