வேற்று கிரகவாசிகள் ரஷ்யாவிற்கு ரேடியோ சிக்னல் அனுப்பினார்களா???

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2016 (13:10 IST)
உண்மையில் வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா? இல்லையா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் அதை பற்றிய பரபரப்பு செய்திகளுக்கு மட்டும் குறையே இல்லை. 


 
 
அந்த வகையில் ரஷ்யாவின் தொலைநோக்கியான ஜெலென்சு க்ஷயா பூமிக்கு அப்பால் இருந்து ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டறிந்துள்ளது. இந்த சிக்னல் 6.3 மில்லியன் பழமை வாய்ந்த நட்சத்திரத்தில் இருந்து வருகிறது என்றும், 94.4 ஒளியாண்டுகளை கடந்து வருகிறது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ரேடியோ சிக்னலை வேற்றுகிரகவாசிகள் அனுப்பி இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் அவர்கள் பூமியை தொடர்பு கொள்ள இந்த ரேடியோ சிக்னலை அனுப்பி இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இதனால் இந்த ரேடியோ சிக்னல் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்