3 மாதங்களில் ரூ. 2313 கோடி லாபம் அடைந்த நிறுவனம் !
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (17:40 IST)
3 மாதங்களில் ரூ. 2313 கோடி லாபம் அடைந்த நிறுவனம்
சீனாவில் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனம் கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 3 மாதங்களில் 2,312கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
இந்த நிறுவனத்தின் தற்போதைய லாபம் என்பது கடந்த 2018 ஆம் ஆண்டினை வருடத்தை விட 38 சதவீதம் அதிகமாகும். மேலும் இந்த நிறுவனத்தில் பங்குதாரர்களுக்கு லாபவிகிதமாக 770 கோடி ரூபாய் அளித்துள்ளதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் (ஜின்ஹூவா ) தகவல் தெரிவித்துள்ளது.
அத்துடன் அலிபாபா நிறுவனம் அந்நாட்டின் சில்லரை வர்த்தகத்தில் தங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மொத்தம் 71 கோடி என்ன்ற உச்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.