மதுபோதையில் இருந்த சிறுமியை கற்பழித்த இளைஞர்கள்: வேடிக்கை பார்த்த பெண்!

சனி, 19 ஆகஸ்ட் 2017 (13:08 IST)
சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் மாகாணத்தில் உள்ள லாஃபென் நகரில் மதுபோதையில் இருந்த சிறுமியை இரண்டு இளைஞர்கள் கூட்டாக பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
கடந்த 2010-ஆம் ஆண்டு மே மாதம் நண்பர்கள் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 14 வயதான சிறுமி ஒருவர் கலந்து கொண்டு அளவுக்கு அதிகமான மது அருந்தியுள்ளார். இதனால் சிறுமிக்கு தூக்கம் வந்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுமி தூங்குவதற்காக அங்கிருந்த அறை ஒன்றிற்கு சென்றுள்ளார்.
 
அந்த அறையில் ஏற்கனவே பெண் ஒருவரும் அவரது சகோதரனும், நண்பர் ஒருவரும் இருந்துள்ளனர். இந்நிலையில் மதுபோதையில் அறைக்குள் வந்த சிறுமியை அந்த இரண்டு இளைஞர்களும் கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர்.
 
மது போதையில் இருந்த சிறுமியால் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இதனை அந்த அறையில் இருந்த மற்றொருப்பெண் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது வேதனை.
 
இந்த பலாத்கார சம்பவம் தெரிந்ததை அடுத்து அந்த பெண் உட்பட இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அந்த இளைஞர்களுக்கு முறையே 8000 பிராங்க், 1000 பிராங்க் மற்றும் 2 ஆண்டுகள், 7 மாதங்கள் சிறை தண்டையும் விதிக்கப்பட்டது. மேலும் அந்த பெண் மீது குற்றம் இல்லாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி மதுபோதையில் இருந்ததால் அவர் உடலுறவுக்கு அனுமதித்திருக்க மாட்டார் என்பதால் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களின் தண்டனையை அதிகரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்