ஆபத்தின்றி பூமியை கடக்கவுள்ள விண்கல், ஆனால்... நாசா தகவல்!!

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (18:58 IST)
மிகப்பெரிதான விண்கல் ஒன்று வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி பூமியைக் கடந்து செல்லும் என கூறப்பட்டது. இதனால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறப்பட்டது.


 
 
இந்நிலையில், அந்த விண்கல்லால் ஆபத்து எதுவுமில்லை என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
 
பூமியை கடக்கவுள்ள இந்த விண்கல் 4.4 கிமீ அளவு கொண்டதாகும். பூமியை 7 மில்லியன் கிமீ தொலைவில் இந்த விண்கல் கடக்கும். 
 
இந்த 7 மில்லியன் கிமீ தொலைவு என்பது பூமிக்கும் விண்கல்லுக்கும் உள்ள மிக குறைந்த இடைவெளி என நாசா அறிவித்துள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்