இந்த விமானம் விண்ணில் பறக்குமா ???

சனி, 13 ஆகஸ்ட் 2016 (16:57 IST)
ஏர்லேண்டர் 10 எனப்படும் உலகில் மிகப் பெரிய விமானம் பிரிட்டனின் ராயல் விமானப்படைத் தளத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கிறது.


 


93 மீட்டர் நீளம், 43.5 மீட்டர் அகலம், 26 மீட்டர் உயரமுடைய இந்த ஹல்க் விமானம் சுமார் 20 டன் எடை கொண்டது. 10 டன் எடை வரை தாங்கிச் செல்லும் திறன் இந்த விமானத்துக்கு உள்ளது. மார்த்தா க்வைன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் மேற்பரப்பு அளவு 38,000 சதுர மீட்டர்கள்.

247 மீட்டர் நீளம், 124 மீட்டர் அகலம், 48 மீட்டர் உயரம் கொண்ட பிரிட்டனின் ராயல் விமானப் படைத் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கொட்டகையின் கீழ்தான் ஏர்லேண்டர் 10 நிறுத்தப்பட்டுள்ளது.

ஏர்லேண்டர் 10 விமானம், நான்கு லிட்டர் சூப்பர் சார்ஜுடு டீசல் எஞ்சின் கொண்டு, மொத்தம் 1380 குதிரை சக்தியை வெளிப்படுத்தும் திறன் அந்த எஞ்சினுக்கு உண்டு.

தரை வழியே அதன் முதல்கட்ட சோதனை ஓட்டம் நிறைவடைந்தது. விமானத்தை விண்ணில் எப்போது பறக்க விட்டு சோதனை மேற்கொள்ளப்படும் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. எப்போது விண்ணில் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்