புகைபிடிப்பதால் ஏற்படும் மரணத்தை போல இதனாலும் 10 சதவீத இறப்பு....

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (00:02 IST)
புகைபிடிப்பதால் ஏற்படும் மரணங்களைப் போல பத்து சதவீத இறப்புகளுக்கு காற்றுமாசு காரணமாக உள்ளது என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
 

 
உலகளவில் மரணங்கள் ஏற்படுவதற்கு நான்காவது பெரிய காரணமாக காற்று மாசு உள்ளது எனவும் உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.
 
புகைபிடிப்பதால் ஏற்படும் மரணங்களைப் போல பத்து சதவீத இறப்புகளுக்கு காற்றுமாசு காரணமாக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மனித உழைப்பு நாட்களும் காற்று மாசு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றன. இந்தியத் தலைநகர் டில்லியிலும் நிலைமை மோசமாகவே உள்ளது.
 
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் உலக வங்கியின் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்