ஃபேஸ்புக்கை தொடர்ந்து வாட்ஸ்அப் சேவைக்கு தடை விதித்த சீனா

செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (13:10 IST)
சீனா முழுவதும் கடந்த சில மாதங்களாக பலமுறை வாட்ஸ்அப் பயன்பாடு தடைப்பட்டு வந்த நிலையில் தற்போது வாட்ஸ்அப் சேவை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.


 

 
சீனாவில் ஃபேஸ்புக் செயலி கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் ஃபேஸ்புக் போன்றே colorful baloons என்ற பெயரில் சமூக வலைதளம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் செயலிக்கு சீனா முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த சில மாதங்களாக பலமுறை வாட்ஸ்அப் பயன்பாட்டில் தடை ஏற்பட்டு வந்தது. வாட்ஸ்அப் பயனர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியாத சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று முதல் சீனாவில் வாட்ஸ்அப் சேவை முழுவதுமாக தடை செய்யப்பட்டது.
 
வாட்ஸ்அப் போன்று பல செயலிகள் சீனாவில் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவின் கிரேட் பயர்வால் மூலம் சைபர் துறை சார்ந்த நடவடிக்கைகளை கவனித்து வரும் சீன அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் இடையூறை ஏற்படுத்தியதை தொடர்ந்து முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் சர்வதேச சிம் காட்டுகளை பயன்படுத்தும் வாட்ஸப் பயனர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் பயன்படுத்தி வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்