கண்டங்கள் பிளவு: மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு வினோதம்..
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (16:33 IST)
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் நிலப்பரப்பு பிளவுப்பட்டு ஏழு கண்டங்கல் உருவானதாக கூறப்படும். அந்த வலையில் தற்போது மீண்டும் கண்டங்கள் பிளவுப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கென்யாவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலப்பிளவு காரணமாக, பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கே ஏடன் வளைகூடா பகுதியில் துவங்கி தெற்கே ஜிம்பாப்வே வரை சுமார் 3000 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த பிளவு ஆப்பிரிக்க கண்டத்தை இரு தட்டுகளாக பிரித்துள்ளதாம்.
இந்த இரு தட்டுகள் சோமாலி மற்றும் நியூபியன் என அழைக்கப்படுகின்றன. இந்த பிளவு அதிகரித்துக் கொண்டே போகும் பட்சத்தில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு இருக்கிரதாம்.
இந்த பிளவு ஏற்பட்டால், எத்தியோப்பியா, ருவாண்டா, தான்ஸானியா, ஜாம்பியா உள்ளிட்ட நாடுகள் தனிக் கண்டமாக பிரிய வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.