ஆப்கானிஸ்தான் பள்ளி மீது குண்டுவீச்சு: 150 பேர் பலி

செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (12:11 IST)
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
 
ஆப்கானிஸ்தானில் உள்ள தஷ்ட்-இ-ஆர்சி என்ற மாவட்டத்தை தாலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்ற ரானுவம் தாக்குதல் நடத்த திட்டம் போட்டது. அதன்படி நேற்று தாலிபான் உறுப்பினர்கள் அனைவரும் மசூதியில் ஒன்றாக இருந்தனர், அதனால் ரானுவம் அவர்கள் மீது குண்டுவீசி வான்வழி  தாக்குதல் நடத்தியது. அப்போது ரானுவத்தினர் குண்டுகளை குறி தவறி  அங்கிருந்த பள்ளியின் மீது வீசினர்.
 
அப்போது அந்த பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருந்ததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதனால் அவர்கள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அங்கிருந்த மசூதியும் தாக்குதலால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக தாலிபான் பயங்கரவாதிகளின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட தகவலில், இந்த தாக்குதலில் 150 பேர் உயிரிழந்ததாகவும், அதில் தீவிரவாதிகளும் அடங்குவர் என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்