கடும் வறுமை எதிரொலி: குழந்தைகளை விற்கும் ஆப்கன் பெற்றோர்!

செவ்வாய், 2 நவம்பர் 2021 (21:07 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாலிபான்கள் கைப்பற்றினர் என்பதும் தற்போது தாலிபான்களின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தாலிபான்களின் கொடுங்கோலாட்சியை தாங்க முடியாமல் பலர் வெளிநாட்டிற்கு சென்று விட்டனர் என்பதும் ஏராளமானோர் உள்நாட்டிலேயே வேறு வழியின்றி வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வேலை வாய்ப்பு இன்றி இருக்கும் பலர் வறுமையில் வாடுவதாகவும் இதன் காரணமாக ஒரு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து அந்த பணத்தில் செலவு செய்து வருவதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இது குறித்து உலக மனித உரிமை கமிஷன் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்