இதனைத்தொடர்ந்து அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி என்பவர் இருந்து வந்த நிலையில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் அறிவித்தார். அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் அய்மான் அல்-ஜவாரி.
இந்நிலையில் காபூலில் அவரது மரணம், அவர் தலிபான்களிடமிருந்து அடைக்கலம் பெற்றாரா என்ற கேள்வியை எழுப்பியது. ஆனால், காபூலில் ஜவாஹிரியின் இருப்பையோ அல்லது மரணத்தையோ இன்னும் ஆஃப்கானிஸ்தான் அரசு உறுதிப்படுத்தவில்லை. அதாவது அல்-ஜவாஹிரி மீதான அமெரிக்காவின் தாக்குதலை தலிபான் அரசு மறுத்துள்ளதாகவே தெரிகிறது.
மேலும் தலிபான்கள் தரப்பில் இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது அமெரிக்கா தெரிவித்துள்ளபடி, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த செய்தியை பற்றிய உண்மைத் தன்மையைக் கண்டறிய தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.