சிறுவனைக் கொன்ற வழக்கு: போலீஸ்காரருக்கு 15 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி

வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (14:28 IST)
அமெரிக்காவில் போலீஸ்காரர் ஒருவர் இனவெறியின் காரணமாக, கருப்பின சிறுவனை கொன்ற குற்றத்திற்காக நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அப்படி கடந்த ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக கருப்பின சிறுவர்கள் மதுவிருந்தில் பங்கேற்றிருப்பதாக தகவல் கிடைத்தது.
 
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், அந்த சிறுவர்களை கைது செய்த முயற்சித்தனர். அப்போது அந்த கருப்பின சிறுவர்கள் காரில் ஏறி தப்பித்து செல்ல முயற்சித்தனர். இதனையடுத்து போலீஸ்காரர் ராய் ஆலிவர், காருக்குள் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் எர்வர்ட்ஸ் என்ற 15 வயது சிறுவன் உயிரிழந்தான்.
 
இச்சம்பவம் நாடெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆலிவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
 
இது சம்மந்தமான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஆலிவர் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து டெக்சாஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்