மகளைக் கடித்த நண்டை கடித்து விழுங்கிய தந்தை...விபரீத சம்பவம்

சனி, 29 அக்டோபர் 2022 (21:19 IST)
சீன நாட்டில் தன் மகளைக் கடித்த நண்டை கடித்துச் சாப்பிட்ட  நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனா நாட்டில் ஜெஜியாங் என்ர நகரில் வசித்து வருபவர் லூ 939). இவர் சில மாதங்களுக்கு முன் தன் வீட்டில் வளர்க்க வேண்டி , இரண்டு நண்டுகள் வாங்கியுள்ளார்.

இதில், ஒரு நண்டு  அவர் மகளைக் கடித்தது. இதனால் வலியால் கதறிய மகளின் அழுகுரல் கேட்ட லூ, ஓடி வந்து, கோபத்துடன், அந்த நண்டை அப்படியே  கடித்து,விழுங்கியுள்ளார்.

இந்த நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு அவருக்கு முதுகில் வலி ஏற்பட்டுள்ளது, இதுகுறித்த், மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்டபோதுதான், நண்டை பச்சையாகக் கடித்ததால் அவரின் ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதையும் 3 வித பாக்டீரியாக்களால்ல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

தற்போது, இதிலிருந்து குணம்பெற அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்