அமெரிக்க கண்டங்களின் முக்கியமான நிதி மையங்களில் ஒன்றாக திகழும் நகரமான மெக்சிகோ ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம், கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து வருகிறது.
சுமார் 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரம், நாளுக்கு நாள் சிறிது சிறிதாக மண்ணில் புதையுண்டு வருகிறது. பல ஆண்டுகளாகவே நிகழ்ந்து வருவது தான் இச்சம்பவம். இதற்கு என்ன காரணம் என விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகரம் இருந்த இடம், மிகப்பெரிய ஏரியாக இருந்துள்ளது. ஏரிப்படுகையின் மேல் இந்நகரம் அமைந்திருப்பதால், அது கொஞ்சம், கொஞ்சமாக மண்ணுக்குள் புதைகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.
அத்துடன் நிருத்தாமல், இங்குள்ள நிலத்தின் அடிப்பகுதிகளின் சில இடங்களில் எரிமலை சாம்பல்கள், மணல் அமைப்பாக மாறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் இன்னும் 20 ஆண்டுகளில் மெக்சிகோ நகரம் மண்ணில் முழுமையாக புதைந்து விடும் என கணித்து அதிர்ச்சி அளித்துள்ளனர்.