மத விரிவுரையில் பங்கேற்காமல் தப்பிச் சென்ற சிறுவனை அடித்துக் கொன்றவர் கைது

திங்கள், 22 ஜனவரி 2018 (15:54 IST)
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் மத விரிவுரையில் பங்கேற்காமல் தப்பிச் சென்ற சிறுவனை அடித்துக் கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தான் நாட்டில் மக்கள் பலர், வறுமையின் காரணமாக தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை. இது போன்ற சிறுவர்களை குறிவைத்து சில இஸ்லாமிய பிரசாரகர்கள் ஆங்காங்கே மத விரிவுரை பாடங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்குள் நச்சுத் தன்மை புகுத்தி, அவர்களை தீவிரவாதத்தினுள் புகுத்தி விடுகின்றனர்
 
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டில் பின் காசிம் நகர் பகுதியில் காரி நஜ்முதீன் என்பவர் நடத்திய மத விரிவுரை நிகழ்ச்சியில் பங்கேற்ற முஹம்மது ஹுசேன் என்ற 8 வயது சிறுவன் பாதி நிகழ்ச்சியில்  தப்பியோடி விட்டான். அவனது பெற்றோர் சிறுவனை பிடித்துவந்து மீண்டும் காரி நஜ்முதீனிடம் ஒப்படைத்தனர். தனது விரிவுரையை கேட்காமல் தப்பியோடிய சிறுவன்மீது ஆத்திரமடைந்த நஜ்முதீன் சிறுவனை கடுமையாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த முஹம்மது ஹுசேன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து மத பிரசாரகர் காரி நஜீமுதீனை கைது செய்த போலீசார் அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்