8 வயது சிறுமி கற்பழித்து கொலை

வியாழன், 11 ஜனவரி 2018 (08:12 IST)
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 8 வயது சிறுமியை கற்பழித்துக் கொன்றுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த வாரம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். சிறுமி கடத்தப்பட்டது சி.சி.டி.வி கேமரா மூலம் தெரியவந்தது. இந்நிலையில், சிறுமியின் உடல் சாதார் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியின் அருகே கண்டெடுக்கப்பட்டது.சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் சிறுமி கற்பழித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். 
 
இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் ஏற்பட்ட மோதலில், போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். அதன்பிறகும் போரட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் கும்பலை நோக்கி சுட்டதில் இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என பஞ்சாப் மாகாண முதலமைச்சர் ஷாபாஸ் ஷரிப் தெரிவித்தார். 8 வயது சிறுமி கடத்தி கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்