ஆபத்தான காட்டில் 7வயது சுட்டி சிறுவனின் 6 நாட்கள்

Webdunia
சனி, 4 ஜூன் 2016 (19:40 IST)
கரடிகள் உலாவும் அடர்ந்த காட்டில் பெற்றோர்களால் தனியாக விடப்பட்ட 7 வயது சிறுவன் 6 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டான்.

 


 
ஜப்பான் நட்டில் ஹோக்காய்டோ தீவில் உள்ள அடர்ந்த மலைக்காடு வழியாக யமாடோ என்ற 7வயது சிறுவன் தனது பெற்றோர்களுடன் காரில் சென்றபோது ஆட்கள் மீதும் கார்கள் மீதும் கற்களை வீசியுள்ளான். அந்த சிறுவன் சேட்டை செய்தலால் அவனின் பெற்றோர் காரில் இருந்து இறக்கி விட்டு சென்றார்கள்.

சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த சிறுவனை காணவில்லை. சிறுவன் இறக்கி விடப்பட்ட இடம் கரடிகள் உலாவும் அடர்ந்த ஆபத்தான காடு என்பதால், சிறுவனின் பெற்றோர்கள் பதறிபோய் காவல்துறையில் புகார் செய்தனர்.
 
பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. சிறுவன் காணாமல் போன இடம் அடர்ந்த காட்டு பகுதி என்பதால் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.
 
6 நாட்களுக்கு பிறகு காட்டில் அமைந்துள்ள ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ வீரர்கள் தங்குவதற்கு அமைப்பட்டிருந்த குடிலில் சிறுவன் இருப்பதை கண்டனர். மேலும் அந்த சிறுவன் பெற்றோர்கள் இறக்கிவிடப்பட்ட இடத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் கண்டுபிடிக்கப்ட்டான்.
 
அந்த சுட்டி சிறுவன், காட்டில் 6 நாட்கள் யாரையும் பார்க்காமல் தனியாக உலாவியதோடு, ராணுவ அதிகாரியிடம் சற்றும் பதற்றம் இல்லாமல் பேசியுள்ளான். அந்த நிகழ்வு ரானுவ அதிகாரிக்கு மிகவும் அதிச்சியை அளித்துள்ளது. 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்