ஐஸ் பாக்ஸில் 2 தலைகள்; வீட்டிற்குள் 7 சடலங்கள்: ஜப்பானில் பரபரப்பு!!

செவ்வாய், 31 அக்டோபர் 2017 (11:12 IST)
ஜப்பானில் வீட்டின் குடியிருப்பு முன்னர் வைக்கப்பட்டிருந்த ஐஸ் பாக்ஸில் இரண்டு மனித தலைகளும் அந்த வீட்டிற்குள் எழு சடலங்களும் இருந்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஸாமா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் ஒரு ஐஸ் பாக்ஸ் இருந்துள்ளது.
 
அக்கம்பக்கம் இருந்த மக்கள் அதை திறந்து பார்த்துள்ளனர். அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பெட்டிக்குள் இரண்டு மனித தலைகள் இருந்துள்ளன. 
 
உடனே, இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீஸார், அந்த வீட்டின் கதவை உடைத்து சோதனை செய்துள்ளனர். 
 
அந்த வீட்டிற்குள் 7 சடலங்கள் இருந்துள்ளன. சடலங்களை கைப்பற்றி போலீஸார் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
 
மேலும், அந்த வீட்டில் தங்கியிருந்த ஷிராய்ஷி என்பவரை கைது செய்துள்ளனர். ஆனால், இந்த கொலை தொடர்பான காரணங்கள் ஏதும் வெளியிடப்பட்டவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்