தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளராக இருந்தவர் ரூபர்ட் முர்டோக். இவருக்கு வயது 92. இவர் தனது ஊடக நிறுவனங்களின் கட்டுப்பாட்டை கடந்த நவம்பரில் தன் மகன் லாச்லனிடம் ஒப்படைத்தார்.
இந்த நிலையில், ஏற்கனவே 5 திருமணங்கள் செய்திருந்த முர்டோ, தன் நீண்ட நாள் காதலியான எலெனா ஜுகோவாவை (67) திருமணம் செய்துகொள்வதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.