இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: 54 பேர் உயிரிழப்பு

புதன், 7 டிசம்பர் 2016 (14:24 IST)
இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள அச்சே பகுதியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாக நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவாகி உள்ளது.  


 
 
பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள் வாழும் நாடான இந்தோனேசியாவில் இன்று அதிகாலை தொழுகைக்காக பலர் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 
 
மக்கள் வீடுகளைவிட்டு வெளியில் ஓடி, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சுனாமி தாக்கலாம் என்ற அச்சத்தில் தங்களது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல பலர் தயக்கம் காட்டினர்.
 
அடுத்தடுத்து, ஐந்துமுறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதால் வீடுகள், கடைகள், மசூதிகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் பலரை மீட்கும் பணி மூழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
 
இன்றைய நிலநடுக்கத்துக்கு 54 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்