வெனிசுலாவில் எண்ணெய் வாங்கினால் 25 சதவீதம் வரிவிதிப்பு! - உலக நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்!

Prasanth Karthick

செவ்வாய், 25 மார்ச் 2025 (09:52 IST)

வெனிசுலா நாட்டில் எண்ணெய் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

 

அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதலே பல அதிரடி சட்டங்களை செயல்படுத்தி வருகிறார் டொனால்ட் ட்ரம்ப். முக்கியமாக வரிகள் தொடர்பான விவகாரத்தில் உலக நாடுகள் அமெரிக்காவிடம் அதிக வரி வசூலித்து ஏமாற்றுவதாக அவர் கருதுகிறார். எனவே அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பல நாட்டு பொருட்களுக்கும் அவர் வரியை அதிகப்படுத்துகிறார்.

 

தற்போது உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விற்பனை டாலர்களில்தான் நடத்தப்படுகிறது. அதனால் கச்சா எண்ணெய் பொருளாதாரம் அமெரிக்காவை சார்ந்து உள்ளது. இந்நிலையில் வெனிசுலா உள்ளிட்ட சில நாடுகள் ஆரம்பம் முதலே அமெரிக்காவுடன் முட்டல் மோதலை தொடர்ந்து வருகின்றன.

 

வெனிசுலாவிலும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் நிலையில் இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் வெனிசுலாவிலும் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. இந்நிலையில் வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் அமெரிக்கா வரி விதிக்கும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

 

ஆனால் அதேசமயம் அமெரிக்காவே கடந்த ஆண்டில் வெனிசுலாவிடம் இருந்துதான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ட்ரம்ப் இந்த முடிவுகளை எடுக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்