41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல தடை? - விசா விதிகளில் திருத்தம்!

Prasanth Karthick

ஞாயிறு, 16 மார்ச் 2025 (10:56 IST)

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ட்ரம்ப் குடியுரிமை விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் 41 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் பல துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். முக்கியமாக அமெரிக்க குடியுரிமை மற்றும் விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நாடுகள் என 41 நாடுகளை பட்டியலிட்டு அந்நாட்டினர் அமெரிக்கா செல்வதற்கே தடை விதிக்கும் வகையில் விசா கட்டுப்பாடுகள் விதித்துள்ளது அமெரிக்கா.

 

பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட பல காரணங்களை சுட்டிக்காட்டி ஆப்கானிஸ்தான், பூடான், க்யூபா, வடகொரியா, ஈரான், லிபியா, சோமாலியா, ஏமன், சிரியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா விசா தடை செய்யப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்