மின் கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த மின்சார வாரியம் முடிவு! பொதுமக்கள் அதிர்ச்சி

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (18:58 IST)
இலங்கையில் 264 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த அந்நாட்டின் மின்சார வாரியம் முடிவு செய்திருப்பது அடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகிறது என்பது தெரிந்ததே இதனையடுத்து பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தப்பட்டது
 
இந்த நிலையில் மின்சார வாரியத்தை லாபத்தில் கொண்டு செல்ல எடுக்கப்படும் முயற்சியாக 264 சதவீதம் மின்கட்டணத்டஹி உயர்த்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து நாளை முதல் மின் கட்டண உயர்வு அமல்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மின்சார கட்டணம் திடீரென மிக அதிக அளவில் உயர்த்தியது பொதுமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் 
 
மின்சார வாரியத்தின் இந்த நடவடிக்கையால் இதுவரை ரூபாய் 2.50 என வசூலிக்கப்பட்டு வந்த ஒரு யூனிட் மின்சாரம் இனி எட்டு ரூபாய் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்