ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு..!

செவ்வாய், 2 ஜனவரி 2024 (10:55 IST)
ஜப்பானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஜப்பானில் நேற்று ஒரே நாளில் 155 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின. இந்நிலையில் இதுவரை ஜப்பான் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ள நிலையில் இடிபாடுகளை அகற்றும் பணி நீடிப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
நிலநடுக்கத்தை தொடர்ந்து விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே பொதுமக்கள் ஓரளவுக்கு நிம்மதி அடைந்துள்ளனர்.
 
நேற்று ஜப்பானில் 7.6 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்தன.  கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். 
 
 இந்த நிலையில் தற்போது முழு வீச்சில் இடுப்பாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்கள் இந்த ஈடுபாடுகளை அகற்றும் பணி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்