சீனாவில் பயங்கர நிலநடுக்கம்; உதவ முன்வந்த எதிரி நாடான தைவான்..!

புதன், 20 டிசம்பர் 2023 (12:00 IST)
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும் அழிவு ஏற்பட்டுள்ள நிலையில் சீனாவின் பகைமை நாளான தைவான் உதவிக்கு முன்வந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அழைத்துள்ளது.  

வடமேற்கு சீனாவில்  நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 6000 மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்து விட்டதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இன்னும் ஆயிரக்கணக்கானோர் வீட்டை விட்டு  வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில்  நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு மீட்பு படையினர் விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு உதவ தைவான் முன்வந்துள்ளது

இது குறித்து தைவான் அதிபர் தனது சமூக வலைத்தளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் வாழும் சீனர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உதவிகள் தேவைப்பட்டால் நாங்கள் அனைத்துவித உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம்.

கடினமான இயற்கை பேரிடர் மீட்பு பணிக்கு சீனாவுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளும் வழங்க தயார் என்று கூறியுள்ளார்.  தைவான் நாட்டை தனது நாடு என சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில் சீனாவுக்கும் தைவானுக்கும் பதற்றம் இருந்து வரும் நிலையில் தைவான் அதிபர் இவ்வாறு தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்